மணல் திருட்டில் லாரி, டிராக்டர்.. அதிகாரிகளை கண்டதும், ஓட்டமெடுத்த லகுட பாண்டிகள்.!
Pudukkottai Sand Smuggling Case Police Investigation
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் அருகேயுள்ள மேலக்கருப்பாடிபட்டி குளத்தில் திருட்டு மணல் அள்ளுவதாக அன்னவாசல் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர்.
இதன்போது, அப்பகுதி வழியாக டிராக்டர் மற்றும் டிப்பர் லாரி வந்த நிலையில், அதனை இடைநிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதன்போது லாரியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்தது தெரியவந்துள்ளது.

லாரி மற்றும் டிராக்டரில் இருந்த ஓட்டுனர்கள் தப்பியோடிய நிலையில், அவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும், இதனைப்போன்று அங்குள்ள அறந்தாங்கி மொட்டையாண்டி பகுதியில் மினி லாரி மூலமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை, காவல் அதிகாரியின் உதவியுடன் வருவாய் ஆய்வாளர் கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Pudukkottai Sand Smuggling Case Police Investigation