ஆபேரஷன் சிந்தூரின் போது பிறந்த குழந்தைக்கு "சிந்தூரி என்று பெயர் வைத்து அசத்திய பெற்றோர்.!!
parents named sindoori to baby girl
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் தாக்குலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் உள்ளிட்ட ஒன்பது இடங்களை குறிவைத்து இந்திய ராணுவம் சரமாரி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு 'ஆபேரஷன் சிந்தூர்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அதிதீவிர துல்லிய தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் 'ஆபரேஷன் சிந்தூரின்போது பிறந்த குழந்தைக்கு 'சிந்தூரி' என்று பெயரிடப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தின் கதிகாரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொண்ட இந்திய ராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கையான 'ஆபேரஷன் சிந்தூரின்போது அந்த பெண் குழந்தை பிறந்ததனால், அந்த குழந்தைக்கு "சிந்தூரி" என்று பெயரிட்டுள்ளனர்.
''பஹல்காமில் கணவர்களை இழந்த பெண்களின் துயரை நீக்கும் வகையில் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நன்னாளை நினைவுகூரும் வகையில் எங்களுடைய பெண்ணுக்கு சிந்தூரி என பெயரிட்டுள்ளோம்" என்று குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
English Summary
parents named sindoori to baby girl