பாகிஸ்தான் வான்பாதுகாப்பை சின்னாபின்னமாக்கிய இந்திய ராணுவம்! - Seithipunal
Seithipunal


இந்தியா அனுப்பிய சுமார் 25 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும், அவை அனைத்தும் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஹரோப் டிரோன்கள் என்றும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பாகிஸ்தான் சிக்கி தவித்துவருகிறது.பாகிஸ்தான் ராணுவம்  இந்திய ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதலில் இறங்கியது. இதனால் ஆத்திரமடைந்த இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துவருகின்றனர்.

குறிப்பாக  பொதுமக்கள் வாழும் பகுதிகளான அவந்திப்புரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ்,  பதிண்டா, சண்டிகார், நால், பலோடி,  பூஜ் என காஷ்மீர், பஞ்சாப், குஜராத் மாநிலங்களின் 15 முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதலை பாகிஸ்தான் தொடுத்தது.

ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதலை அரங்கேற்றியது. அப்போது பாகிஸ்தானின் இந்த ஆயுதங்கள் அனைத்தையும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு  நடுவானிலேயே வழிமறித்து அழித்தன.

ஒருபுறம் பாகிஸ்தானின் டிரோன்கள், ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் மறுபுறம் பாகிஸ்தானை நோக்கியும் தாக்குதல் நடத்தப்பட்டன. குறிப்பாக இந்தியாவின் அதிரடியில் லாகூர் வான் பாதுகாப்பு அமைப்பு சின்னாபின்னமானது. இது பாகிஸ்தானுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது. இதனிடையே இந்தியா அனுப்பிய சுமார் 25 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும், அவை அனைத்தும் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஹரோப் டிரோன்கள் என்றும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Indian army has shattered the air defense of Pakistan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->