தேசியக் கொடியை அவமதித்தாரா...? - உலகக் கோப்பை நாயகன் ஹர்திக் பாண்ட்யா மீது வழக்கு - Seithipunal
Seithipunal


ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ள நிலையில், நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்ட்யா மீது தேசியக் கொடியை அவமதித்ததாகப் புகார் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாண்ட்யா தேசியக் கொடியைத் தன் மீது போர்த்திக்கொண்டு கண்ணியக்குறைவாகவும், ஆபாசமாகவும் நடந்துகொண்டதாக வழக்கறிஞர் வஜித் கான் என்பவர் புனேவில் உள்ள சிவாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஹர்திக் பாண்ட்யா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

தேசியக் கொடியின் கண்ணியத்தைப் பேணுவது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்றும், இந்தச் செயல் சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியில் இருந்த கிரிக்கெட் ரசிகர்களிடையே, இந்த சட்டப் போராட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Did He Insult National Flag Case Filed Against World Cup Hero Hardik Pandya


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->