வணிக சிலிண்டர் தட்டுப்பாடு...! - கோவையில் காலி சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதனப் போராட்டம்...! - Seithipunal
Seithipunal


மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ள நிலையில், இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.

இதன்படி, வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 60 ரூபாயும், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 115 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வோடு சேர்த்து, சந்தையில் வணிக சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் உணவகங்களை நடத்த முடியாமல் உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர்.

மத்திய அரசின் இந்த விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைக் கண்டித்து, கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலி சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

எரிபொருள் நெருக்கடிக்கு இடையே இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Commercial Cylinder Shortage Novel Protest Coimbatore Garlanding Empty Cylinder


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->