இஸ்ரேல் - ஈரான் மோதல்..! தேக்கமடைந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான கடலை மிட்டாய்கள்...!
Israel Iran Conflict Groundnut Candies Worth Crores Rupees Left Stranded
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியின் அடையாளமான கடலை மிட்டாய், புவிசார் குறியீடு பெற்ற பிறகு வளைகுடா நாடுகளுக்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
குறிப்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்கு 70% ஏற்றுமதி நடைபெற்று வந்த நிலையில், தற்போது நிலவும் சர்வதேசப் போர் பதற்றம் (அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையிலான மோதல்) காரணமாக இந்த வர்த்தகம் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

இதனால் சுமார் 120 உற்பத்தி நிறுவனங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஏற்கனவே கடலைப்பருப்பு விலை உயர்வால் தவித்து வந்த உற்பத்தியாளர்கள், தற்போது போர் சூழலால் வெளிநாட்டு ஆர்டர்கள் ரத்து செய்யப்படுவதால் பல கோடி ரூபாய் மதிப்பிலான மிட்டாய்கள் தேக்கமடைந்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், பெட்ரோலிய பொருட்கள் தட்டுப்பாட்டால் பேக்கிங் செய்யப் பயன்படும் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் ஜார்களின் விலையும் அதிகரித்துள்ளது.
கடலை மிட்டாய் மட்டுமின்றி, அதனுடன் ஏற்றுமதி செய்யப்படும் இதர இனிப்பு மற்றும் கார வகைகளும் முடங்கியுள்ளதால், கோவில்பட்டி பகுதி சிறு குறு தொழிலாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.
English Summary
Israel Iran Conflict Groundnut Candies Worth Crores Rupees Left Stranded