மதுரை மீனாட்சியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்... திரளான பக்தர்கள் பங்கேற்பு!
Madurai Meenakshi Amman Temple Chariot Festival is grand Numerous devotees participating
மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க, மாசி வீதிகளில் தேர் வலம்வந்தது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றுவருகிறது.நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தனர். சித்திரைத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் நேற்று காலை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிலையில், சித்திரைத்திருவிழாவின் 11-ம் நாளான இன்று மற்றொரு முக்கிய விழாவான தேரோட்டம் அதிகாலை 5 மணி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சுந்தரேசுவரர்-பிரியாவிடை அம்மன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர்.அப்போது பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க மாசி வீதிகளில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
அசைந்து வரும் தேரை காண்பதற்காக சங்கு முழங்கியபடியும், இசை வாத்தியங்கள் முழங்கியபடியும், அரகரா சிவசிவா முழக்கத்துடனும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துவருகின்றனர். தேரோட்டத்தையொட்டி, மாசி வீதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Madurai Meenakshi Amman Temple Chariot Festival is grand Numerous devotees participating