விமான நிலையங்கள் மூடல்.. சுற்றுலாப்பயணிகள் சிக்கித்தவிப்பு!
Closure of airports Tourists stranded
நிலைமை சீராகி விமானங்கள் இயக்கப்படும் வரை எவ்வித கட்டணமுமின்றி ஓட்டல் அறைகளில் தங்கி கொள்ள அனுமதி வழங்கி அவர்களுக்கு இலவசமாக உணவு கொடுத்தும் உதவ அங்குள்ள ஓட்டல்கள் முன்வந்துள்ளன.
பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் அதிரடி நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது, இதையடுத்து பாகிஸ்தான் அடாவடியாக இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சித்துவருகிறது. நேற்று 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
இந்தநிலையில் இந்தியா- பாகிஸ்தான் மோதல் காரணமாக காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையம் மற்றும் லடாக் விமான நிலையம் அதிரடியாக மூடப்பட்டது.
காஷ்மீர் மற்றும் லடாக்கில் சுற்றுலாவுக்காக சென்றவர்களில் பலர் விமானங்கள் மூலமாக திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டனர். உள்நாட்டினர் மட்டுமின்றி வௌிநாடுகளில் இருந்தும் வந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஓட்டல்களிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .
இந்தநிலையில் லடாக்கில் உள்ள ஓட்டல்கள், சுற்றுலாப்பயணிகளுக்கு தாமாக முன்வந்து அடைக்கலம் கொடுத்துள்ளன. நிலைமை சீராகி விமானங்கள் இயக்கப்படும் வரை எவ்வித கட்டணமுமின்றி ஓட்டல் அறைகளில் தங்கி கொள்ள அனுமதி வழங்கி அவர்களுக்கு இலவசமாக உணவு கொடுத்தும் உதவ அங்குள்ள ஓட்டல்கள் முன்வந்துள்ளன.
English Summary
Closure of airports Tourists stranded