கராச்சி துறைமுகம் மீது கடற்படை கடும் தாக்குதல்..நிலைகுலைந்த பாகிஸ்தான்!
Severe attack on Karachi port by naval forces Pakistan in turmoil
1971-ம் ஆண்டுக்கு பிறகு கராச்சி நகரில் இந்திய ராணுவம் முதல் முறை தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த மாதம் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்தது.
இந்தநிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்டு இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.இந்த தாக்குதல் நேற்று இரவு தீவிரமானது.
இந்திய ராணுவத்தின் விமானப்படை மற்றும் தரைப்படை ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தின.
இந்தநிலையில் பாகிஸ்தானின் மிகப்பெரிய துறைமுகமான கராச்சி துறைமுகத்தை இலக்காக கொண்டு இந்திய கடற்படை ஏவுகணைகள் வீசி தாக்கியது.
நள்ளிரவில் கடற்படை மூலம் தாக்குதல் வேட்டையில் இறங்கியது. பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான கராச்சி, ராவல்பிண்டி, குவெட்டா. லாகூர் உள்ளிட்ட 9 நகரங்களில் இந்திய ராணுவத்தின் முப்படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1971-ம் ஆண்டுக்கு பிறகு கராச்சி நகரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
English Summary
Severe attack on Karachi port by naval forces Pakistan in turmoil