புதுக்கோட்டையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! மக்கள் பீதி!
Pudukkottai increasing dengue
புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு 200 ஐ தாண்டி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெங்கு காய்ச்சல் கடந்த சில மாதங்களாக வேகமாக பரவி வருகிறது.
டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் புதுக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவுகிறது.
நேற்று ஒரு நாளில் மட்டும் 59 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது.

டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல் திருச்சி மாவட்டத்திலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து ஒரே நாளில் 18 பேர் பாதிக்கப்பட்டு மொத்தமாக 284 ஆக உயர்ந்துள்ளது. மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 83 பேர் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Pudukkottai increasing dengue