தேவேந்திரகுல வேளாளர்களின் கோரிக்கை நிறைவேற்றம் - பிரதமர் மோடி உறுதி.! - Seithipunal
Seithipunal


இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக சென்னைக்கு பிப்ரவரி 14 ஆம் தேதி வருகை தந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திட்டடங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இதன்பின்னர், மக்கள் மத்தியில் உரையாற்றினார். 

இந்த உரையில், " இந்திய மீனவர்களால் தேசமே தலைநிமிர்கிறது. அமைதிக்கும், அன்புக்கும் அடையாளமாக மீனவர்கள் இருக்கிறார்கள். சென்னை உட்பட 5 இடங்களில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். கடல்பாசி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழக கடலோர மீனவமக்கள் பலன் பெறுவார்கள். இனி வரும் வருடங்களில் மீனவர்களின் வாழ்வாதாரம் கட்டாயம் உயரும். 

கடற்பாசி பூங்கா மூலமாக தமிழக மீனவ பெண்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இணைய வசதியை ஊக்குவிப்பதில் இந்தியா சிறந்த திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. கிராமத்தில் மின்சார வசதியை அளிக்க புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மாபெரும் சுகாதாரத்திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் புதிய வளர்ச்சி இளைஞர்களுக்கு பேருதவி செய்யும்.

தமிழகத்தின் கலாச்சாரத்தை பாதுகாத்து கொண்டாடுவதில் கெளரவம் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர்களுக்கான கோரிக்கையான, தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரால் அழைக்கப்பட கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது. 7 உட்பிரிவுகளை கொண்ட தேவேந்திர குல வேளாளர்கள் அனைவரும் இனி தேவேந்திர குல வேளாளர்கள் என அழைக்கப்படுவார்கள். மத்திய அரசு மற்றும் மாநில அரசு இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த 2015 ஆம் வருடத்தில் தேவேந்திர குல வேளாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பை நான் மறக்கவே மாட்டேன். அவர்களிடம் நான் அன்றே உறுதியளித்தேன். டெல்லியில் அவர்களின் ஒருவனாக இருப்பதாக தெரிவித்தேன். இந்த தீர்மானம் நீதி, கண்ணியம் மற்றும் வாய்ப்பு தொடர்பானது. அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. நேசம், சகோதரத்துவம் போன்றவற்றை கொண்டாடுபவர்கள். தங்களின் சுய நம்பிக்கை, சுய கவுரவத்தை இது வெளிப்படுத்துகிறது " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Accepts Devendra Kula Velalar request


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->