பணிக்குச் சென்ற காவலர் - எமனாக வந்த லாரி.!
police officer died accident in viruthnagar
பணிக்குச் சென்ற காவலர் - எமனாக வந்த லாரி.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி காவல் நிலையத்தில் காவலராக ராஜேஸ்வரன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், ராஜேஸ்வரன் இன்று மலை அப்பகுதியில் உள்ள சோதனை சாவடிக்கு பாதுகாப்பு பணிக்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இதையடுத்து, ராஜேஸ்வரன் நரிக்குடி அருகே உள்ள மறையூர் பாலத்தின் வளைவில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில், லாரியின் அடியில் சிக்கிய ராஜேஸ்வரன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதைப்பார்த்த அந்தவழியாக சென்ற வாகனஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான ராஜேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இதற்கு முன்னதாக ஆயுதப்படையில் பணியாற்றி வந்த ராஜேஸ்வரன் சில மாதங்களுக்கு முன்புதான் காவல் நிலைய பணிக்கு மாற்றப்பட்டு, கடந்த 6 நாட்களுக்கு முன் தான் நரிக்குடி காவல் நிலையத்திற்கு பணி மாறுதலாகி வந்துள்ளார். இந்த நிலையில் காவலர் ராஜேஸ்வரன் விபத்தில் சிக்கிய பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
police officer died accident in viruthnagar