கள்ளக்குறிச்சி || 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - தந்தையின் நண்பருக்கு வலைவீச்சு.!!
police investigation of harassment case in kallakurichi
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே 15 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பூ பறித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியினுடைய தந்தையின் நண்பரான பொறையூரை சேர்ந்த லாாி ஓட்டுனர் கோவிந்தராஜ் என்பவர் சிறுமியை அந்த கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார்.
இதற்கிடையே, சிறுமியை காணவில்லை என்று அவரது தந்தை தேடிச்சென்றபோது வனப்பகுதியில் நின்ற சிறுமியிடம் ஏன் இங்கு வந்தாய் என்று விசாரித்துள்ளார். அதற்கு அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை உளுந்தூா்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் படி போலீசார் கோவிந்தராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி கோவிந்தராஜை வலைவீசி தேடி வருகின்றனர். பூ பறித்துக்கொண்டிருந்த சிறுமியை அவரது தந்தையின் நண்பர் வனப்பகுதிக்குள் அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
police investigation of harassment case in kallakurichi