பாமக நிர்வாகி வீட்டினை குண்டர்களுடன் சூறையாடிய போலீஸ்! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாமக!  - Seithipunal
Seithipunal


பாமக பொருப்பாளர் சேகர் வீடு தாக்கப்பட்ட சம்பவத்தில் செய்யூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க காவல் நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றது. 

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம் மடையம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த
பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் சேகர். இவருக்கும் அதே ஊரில் இன்னோருவருக்கும் பிரச்சனை இருந்து வருகிறது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. 

இந்த சம்பவங்கள் நடைபெற்று ஒரு வருடம் ஆன நிலையில், பழைய வழக்கில் தேடுதல் என்ற பெயரில் சேகர் வீட்டிற்கு சென்ற செய்யூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நந்தகுமார், உடன் அழைத்து சென்ற 10 குண்டர்கள் என சேகர் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளார். 


 
அதிர்ச்சியடைந்த சேகர் அக்கம் பக்கத்தினர் வீடுகளில் உள்ளவர்களை போன் மூலம் அழைத்துள்ளார். மக்களும் கூடியதை தொடர்ந்து, உதவி ஆய்வாளர் நந்தகுமார் உள்ளிட்ட அனைவரும் தப்பித்து சென்றுள்ளனர். இதனையடுத்து எல்லைமீறிய செய்யூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தை, பாமக மாநில துணை பொதுச்செயலாளர் பொன் கங்காதரன் உள்ளிட்ட, பாட்டாளி மக்கள் கட்சியினர் முற்றுகை இட்டதால் பரபரப்பு உண்டானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police inspector attacked PMK person house in seyyur


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->