பழிக்கு பழியா.? விசாரணைக்கு வந்தவர் ஓட ஓட விரட்டி கொலை... காவல்துறை விசாரணை.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில்  இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடார குளம் கிராமத்தைச் சார்ந்தவர் மணிகண்டன் இவர் ஒரு கொலை வழக்கு தொடர்பாக தென்காசி நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் ஊர் நோக்கி திருப்பிக் கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்த மூன்று பேர் மணிகண்டனை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் பகுதியைச் சார்ந்த இசக்கி பாண்டி ரமேஷ் இசக்கி துரை ஆகிய மூன்று பேரையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2020 ஆம் ஆண்டு  நாச்சியார் பட்டியில் நோட்டூரைச் சார்ந்த  முத்துப்பாண்டி என்பவர் தனது நண்பர்களுடன் சென்று பாராட்டு திருடி இருக்கிறார். அப்போது அந்தப் பகுதியில் காவலுக்கிருந்த மணிகண்டன் அவரது தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் ஆகியவர் திருட வந்தவர்களை தாக்கிய உள்ளனர். இதில் திருட வந்த முத்துப்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கில்  பதிவாகி விட்டுச் செல்லும் போது தான் மணிகண்டன் கொல்லப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக மூன்று பேர்  கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இது பழிக்கு பலி சம்பவமாகவே நடந்ததாகவும் காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police are investigating whether the man who came for investigation near Tenkasi was chased away and killed as revenge


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->