#BigBreaking || மானிய விலையில் 50 ரூபாய்க்கு பெட்ரோல், டீசல்.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.! - Seithipunal
Seithipunal


தமிழக விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தை போல் தமிழகத்திலும் விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல் டீசல் வழங்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா என்பவர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "பீகார் மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் 50 ரூபாய்க்கு மானிய விலையில் வழங்குகின்றனர்.

இதைப் போல தமிழகத்திலும் மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விவசாயிகளுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது என்றும் மனுதாரர் அய்யா அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இதனை இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் வரவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, மானிய விலையில் மதத்திற்கு 10 லிட்டர் என்ற முறையில், லிட்டருக்கு 25 ரூபாய் பெட்ரோல் விலையை குறைத்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதே சமயத்தில் தமிழகத்தில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலையை குறைப்பதாக அறிவித்துவிட்டு, பின்னர் தேதி குறிப்பிட்டு சொன்னோமோ? என்று அறிவாளித்தனமான ஒரு கேள்வியை எழுப்பவே அது சர்ச்சையானது. வேறு வழியில்லாமல் பெட்ரோல் விலையை மட்டும் மூன்று ரூபாய் குறைத்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petrol price issue farmers appeal to chennai hc


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->