#மதுரை || பத்திரப்பதிவு அலுவலகம் முன் தீக்குளித்த நபர் உயிரிழப்பு!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அடுத்து எறுக்கலைநத்தம் பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கனகவேல் என்பவரிடம் தனது 14 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். அந்த நிலத்தை மாதவனால் மீட்க முடியாத நிலையில் அதனை கனகவேலிடமே விற்பனை செய்துள்ளார். 

மாதவன் நிலத்தை தனது பெயரில் மாற்றிக் கொண்ட கனகவேல் மற்றொரு நபருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றுள்ளார். இதனை அறிந்த மாதவன் நிலத்தை திருப்பி வழங்கும் படி கனகவேலிடம் கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த கனகவேல் நேற்று மற்றொரு நபருக்கு பத்திரம் பதிவு செய்யப் போவதாக தகவல் தெரிந்து ஊமச்சிகுளம் பத்திரப்பதிவு அலுவலகம் சென்ற மாதவன் தின்னர் ஊற்றி தீக்குளித்தார்.

இதனை கண்ட பொதுமக்கள் மாதவனை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மாதவன் 95 சதவீத தீக்காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஊமச்சிகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

person set fire in front of deed registry office was died in Madurai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->