பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் செங்கல்பட்டில் பதற்றம்.!! சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஸ்தம்பித்தது.!!
People blocked road at Chengalpattu road accident site
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே ஜிஎஸ்டி சாலையில் அதிவேகமாக தாம்பரம் நோக்கிச் சென்ற டிப்பர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையை கடக்க முயன்ற 3 இரு சக்கர வாகனங்களின் மீது அதிவேகமாக மோதியது. இதனை தொடர்ந்து டிப்பர் லாரி அங்கு இருந்த சென்டர் மீடியேட்டரை கடந்து மரத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பவானி (40), எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்கள் ஜஸ்வந்த் (23) கார்த்திக் (24) மற்றும் பார்த்தசாரதி (40) என 4 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவரின் உடல்கள் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. டிப்பர் லாரி ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை விபத்து நடைபெற்ற இடத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் பகுதியில் பதற்றமான சூழல் நிலவு வருகிறது.
English Summary
People blocked road at Chengalpattu road accident site