டாஸ்மாக்கில் இனி ஆதார் கார்டு, பாஸ்போர்ட் கட்டாயம்.! ஆப்படித்த அதிகாரிகள்.!  - Seithipunal
Seithipunal


டாஸ்மாக்கில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் மது வாங்கவும் கூடாது, அவர்களுக்கு விற்பனை செய்யவும் கூடாது என மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கின்றது.

டாஸ்மாக் கடைகளுக்கு மது வாங்க வரும் நபர் 21 வயதுக்கு கீழே இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டால், அவருடைய பாஸ்போர்ட் ,அடையாள அட்டை ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு ஆகியவற்றை வைத்து அவர்களின் வயதை சரிபார்க்க வேண்டும் என்ற விதி அமலுக்கு வந்துள்ளது.

Image result for TASMAC SEITHIPUNAL

மேலும், வயது குறைவாக மது வாங்க வருபவர்களிடம் அவருடைய முகவரி, பெயர் உள்ளிட்ட விபரங்களை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். என்றும் புதிய விடி அமலுக்கு வந்துள்ளது. மாவட்ட மேலாளர்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் இதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும், டாஸ்மாக், மது கடைகளிலும் இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தனிப்பட்ட கவனிப்பு பராமரிக்கப்பட்டு வருகின்றது. இதனை மீறி மது விற்பனை செய்தால் அந்த டாஸ்மாக் கடைகளில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எனவே டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பின் அனைத்தும் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும், டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PASSPORT OR ADHARCARD MUST IN TASMAC


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->