டாஸ்மாக் கடையில் வெளிநபர் பணிபுரிந்த விவகாரம்: ஒருவர் கைது; காவல்துறை எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் உட்கோட்டம் பந்தநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடையில் (கடை எண்: 8069), கடைப் பணியாளர் அல்லாத வெளிநபர் ஒருவர் விற்பனைப் பணியில் ஈடுபட்டு வருவதாகக் காவல்துறைக்குப் புகார் பெறப்பட்டது.

அப்புகாரின் அடிப்படையில் பந்தநல்லூர் காவல் நிலையப் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் விதிமீறலில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வெளிநபரான சரத்குமார் என்பவரைக் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்துத் தஞ்சாவூர் மாவட்டக் காவல்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வச் செய்தி அறிக்கையில் (செய்தி வெளியீடு எண்: 108), அரசு டாஸ்மாக் கடைகளில் வெளிநபர்களைப் பணியமர்த்துவது அல்லது விற்பனையில் ஈடுபடுத்துவது தொடர்பான புகார்கள் மீது தொடர்ந்து சட்டப்படி உரிய கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Outsider Arrested for Working in Thanjavur TASMAC Outlet Police Issue Strict Warning


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->