அதிமுகவின் தலைமை பதவி - ஓபிஎஸ் கையில் எடுத்த கடைசி ஆயுதம்!  - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம், மீண்டும் அதிமுகவை தனது தலைமையின் கீழ் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையே மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ், கனிசமான வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் அவரின் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும் இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தால், ஓ பன்னீர்செல்வம் நிச்சயமாக அதிமுகவை கைப்பற்றி, தனது தலைமையின் கீழ் கொண்டு வருவார் என்றும் அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகில் உள்ள திருச்சிறுகுடி கிராமத்தில் மங்களாம்பிகை சமேத சூட்சுமபுரீஸ்வரர் கோவிலில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் மகன் ரவீந்திரநாத் ஆகியோர் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளனர்.

இந்த கோயிலை பொறுத்தவரை திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். மேலும் இந்த கோவிலில் தரிசனம் செய்தால் பதவி உயர்வு உள்ளிட்டவைகள் உடனே வந்து சேரும் என்று நம்பப்படுகிறது.

இதன் காரணமாகவே ஓ பன்னீர்செல்வம் இந்த கோவிலில் தனது மகனுடன் தரிசனம் மேற்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS visit Thiruvarur Thiruchuvadi Temple


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->