7 தமிழர் விடுதலை விவகாரத்தில், அன்றில் இருந்து இன்று வரை - துணை முதல்வர் ட்விட்.! - Seithipunal
Seithipunal


முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநரின் ஒப்புதல் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. 

மேலும், இவர்கள் அனைவரும் கடந்த 29 வருடமாக சிறையில் இருந்து வரும் நிலையில், இவர்களை விடுதலை செய்ய சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் ஆளுநரின் நடவடிக்கையால் நல்லதொரு பதில் கிடைக்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த விஷயம் தொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் 4 நாட்களுக்குள் 7 தமிழர் விடுதலை தொடர்பாக முடிவெடுப்பார் என்று மத்திய அரசு தரப்பு பதில் தெரிவித்தது. 

இந்த விஷயம் தொடர்பாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதிவு செய்துள்ள ட்விட்டில், " பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சிறையிலிருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்ததும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மேதகு ஆளுநருக்கு பரிந்துரைத்ததும் மாண்புமிகு அம்மா அவர்களும், அம்மாவின் அரசும் தான்.

7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அம்மா அரசின் உறுதியான நிலைப்பாடு. விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Tweet about 7 Tamilar Release Issue 23 Jan 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->