ஓபிஎஸ் தரப்பிலிருந்து அதிமுகவுக்கு வந்த அழைப்பு! ஆகா.., வரும் 7 ஆம் தேதி சம்பவம் இருக்கே!
OPS TTV Sasikala Vaithiyalingam Daughter marriage
ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா மூன்று பேரும் இணைந்து செயல்படுவதற்கு அச்சாரமாக, வருகின்ற ஏழாம் தேதி வைத்தியலிங்கத்தின் இல்ல திருமண விழா அமையும் என்று, மூன்று பேரின் ஆதரவாளர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளரான வைத்தியலிங்கத்தின் இளைய மகள் திருமணம் தஞ்சாவூரில் விமர்சையாக நடைபெற உள்ளது. இதற்காக ஓ பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து வைத்திலிங்கம் திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

இதில், சசிகலாவுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கும்போது, சசிகலாவின் கையில் கட்டு கட்டி இருந்ததை பார்த்து வைத்திலிங்கம் துடிதுடித்து போனதாக அவர் ஆதரவாளர்கள் பேசி கொள்கின்றனர். கையில் சிறு முறிவு ஏற்பட்டதால் சசிகலா கட்டு கட்டி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது ஒரு புறம் இருக்க, அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் சிலருக்கும் வைத்திலிங்கம் திருமண அழைப்பு கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த விவகாரம் அதிமுக தலைமை எடப்பாடி பழனிச்சாமியின் காதுக்கும் சென்றுள்ளதாக தெரிகிறது.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டால். யாராக இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொள்வார் என்பது உறுதி என்பதால், வைத்தியலிங்கம் தனது மக்கள் திருமண விழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தாலும் புறக்கணிக்க உள்ளதாகவே தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
English Summary
OPS TTV Sasikala Vaithiyalingam Daughter marriage