#BREAKING:: சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு தமிழகத்தில் முதல் பலி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று 16 இடங்களில் 100 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பம் கொளுத்தியது. மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்ச வெப்பநிலை 29 - 30 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அருகே சுட்டெரிக்கும் வெயிலால் 48 வயது நபர் உயிரிழந்துள்ளார். வேலூர் மாவட்டம் பொய்கை ஊராட்சி சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் விரிஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கிய போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்த முருகனுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்து வந்துள்ளார் என்பதை தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

One dies due to extreme heat in Vellore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->