ஒடிசா ரெயில் விபத்து - தமிழகம் முழுவதும் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு.!! - Seithipunal
Seithipunal


ஒடிசா ரெயில் விபத்து - தமிழகம் முழுவதும் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு.!!

நேற்று ஒடிசா மாநிலத்தில் அடுத்தடுத்து மூன்று ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் சுமார் 233க்கு மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். மேலும், 900 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாட்டையே பதறவைத்துள்ள இந்த விபத்திற்கு அரசியல் கட்சியினர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒடிசா மாநில முதலமைச்சரை தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு, "ரயில் விபத்தில் உயரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு, ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் தேவைப்படின் தமிழ்நாட்டின் மருத்துவக்குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தமிழகத்தில் இருந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி உள்பட 4 பேர் கொண்ட குழுவை மீட்புப் பணியில் உடனிருந்து தமிழ்நாட்டிற்கு தேவையான உதவிகளை செய்திட சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (3.6.2023) ஒருநாள் மட்டும் தூக்கம் அனுசரிக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one day mourning observed in tamilnadu for odisa train accident


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->