அதிகரித்து வரும் கொரோனா தொற்று.! புதுக்கோட்டையில் ஒருவர் பலி.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 5676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக முழுவதும் 2099 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் கொரோனா தொற்றுக்காக அரசு மருத்துவக் கல்லூரி பல்நோக்கு சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த முதியவருக்கு, தற்பொழுது கொரோனா தொற்றும் ஏற்பட்டதால் முதியவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Oldman died due to corona infection in Pudukkottai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->