காய்கறி வியாபாரிக்கு எமனாக வந்த 2 லட்சம் - திருச்சியில் சோகம்.!!
old man sucide for two lakhs money transfer in trichy
காய்கறி வியாபாரிக்கு எமனாக வந்த 2 லட்சம் - திருச்சியில் சோகம்.!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டு நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். காய்கறி வியாபாரியான இவரது வங்கி சேமிப்பு கணக்கில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தவறுதலாக ரூ.2 லட்சத்தை யாரோ அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை எடுத்து முருகேசன், பல்வேறு தேவைகளுக்காக செலவு செய்துள்ளார்.
இந்த நிலையில் முருகேசனின் வங்கி சேமிப்பு கணக்கில் தவறுதலாக பணத்தை செலுத்திய அந்த நபர் சம்பந்தப்பட்ட தனியார் வங்கியின் கிளையில் சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வங்கி மேலாளர், முருகேசனின் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினார்.

அதன் பின்னர் ரூ.2 லட்சத்தை மீண்டும் செலுத்துமாறு அறிவுறுத்தி விட்டு சென்றார். இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த முருகேசன் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து, மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முருகேசனின் மனைவி காவல் துறையினக்கு தகவல் அளித்துள்ளார்.
அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
old man sucide for two lakhs money transfer in trichy