ஓ.பன்னீர்செல்வத்தை சமாதான படுத்த வேண்டும்..பாஜவுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
O Panneerselvam should be pacified TTV Dhinakarans insistence to BJP
ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணிக்கு அழைத்துவர பாஜகவினர் முயற்சிக்க வேண்டும். மத்திய மந்திரி அமித் ஷா தலையிட்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பார் என டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அவருக்குவாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், என்னிடம் சொல்லி இருந்தால் பிரதமரை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருப்பேன் என தெரிவித்து இருந்தார். ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரனை 6 முறை தொலைபேசியில் அழைத்தும், எனது அழைப்பை அவர் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால், தன்னையோ, தனது உதவியாளரையோ ஓ.பன்னீர்செல்வம் அழைக்கவில்லை என நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.இதனால் ஓ.பன்னீர்செல்வம் - நயினார் நாகேந்திரன் இடையே கருத்து மோதல் முற்றி வருகிறது.

இந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகியது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
"தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகியது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக பாஜக கூட்டணியிலும், அக்கட்சியின் தலைவர்களுடனும் நல்ல உறவில் இருந்தார். அந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டிருக்கக் கூடாது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய தனது முடிவை ஓ.பன்னீர்செல்வம் மாற்றிக்கொள்ள வேண்டும். அவரை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணிக்கு அழைத்துவர பாஜகவினர் முயற்சிக்க வேண்டும். மத்திய மந்திரி அமித் ஷா தலையிட்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பார்."இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
O Panneerselvam should be pacified TTV Dhinakarans insistence to BJP