திருப்பதி பிரம்மோற்சவ விழா: பலத்த பாதுகாப்பு செய்ய உத்தரவு!
Tirupati Brahmotsav Festival Orders to ensure strong security
ஏழுமலையான் கோவிலில் வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாக்கு முன்னிட்டு, பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்புக்காக சிறப்பு திட்டமிடல் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் 24-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி முரளிகிருஷ்ணா தலைமையில் திருமலையில் உள்ள அன்னமய பவனில் பாதுகாப்பு, கண்காணிப்பு, தீயணைப்பு சேவைகள் மற்றும் சிறப்பு பாதுகாப்புப்படை அதிகாரிகளுடன் ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது .
தேவஸ்தான பாதுகாப்புத்துறை அதிகாரி முரளிகிருஷ்ணா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில்,நவீன கண்காணிப்பு உபகரணங்கள்,கட்டளை கட்டுப்பாட்டு மையங்கள்,சிறப்பு பாதுகாப்பு படைகள்மூலம் தொடர்ச்சியான கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்கவுள்ள பட்டு வஸ்திர நிகழ்வையும்,கருட வாகன சேவை, சக்கர ஸ்நானம் போன்ற நிகழ்வுகளையும் முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டன.
போக்குவரத்து நெரிசல் தவிர, பக்தர்கள் அனாயாசமாக தரிசனம் செய்ய,கேலரியில் முன்னேற்பாடுகள்நுழைவு, வெளியேறும் வழி ஒழுங்குப்படுத்தல்,தனிப் பார்க்கிங் மண்டலங்கள்என்பவை திட்டமிடப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
English Summary
Tirupati Brahmotsav Festival Orders to ensure strong security