இதோ இருக்கு ஆதாரம்.. நயினார் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்த ஓ.பி.எஸ்.!!
ops evidence revelved against nainar nagendran
சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அவருக்கு பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காததால் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
தொடர்ந்து அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது தொடர்பாக 6 முறை அழைத்தும் நயினார் நாகேந்திரன் அழைப்பை ஏற்கவில்லை என்று குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு மறுப்புத் தெரிவித்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஓ பன்னீர்செல்வம் என்னை அழைக்கவில்லை. நான் தான் அவரை செல்போனில் அழைத்தேன். அவர் சொல்வதுதான் ஆதாரமாக இருக்குமே தவிர அவரிடம் வேறு ஆதாரம் ஏதும் இருக்காது.

ஏற்கனவே ஏற்பட்ட தொடர்பை அடுத்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். ஒரு முடிவு எடுத்துவிட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வம் ஒரு காரணத்தை கூறுகிறார் என்றுத் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை செய்தியாளர்களிடம் காண்பித்துள்ளார். அதாவது, கடந்த ஜூலை மாதம் 24-ந்தேதி மற்றும் ஏப்ரல் 12 ஆகிய தேதிகளில் நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை செய்தியாளர்களுக்கு காண்பித்துள்ளார்.
English Summary
ops evidence revelved against nainar nagendran