அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு எத்தனை இடங்கள்? நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!
ADMK BJP Alliance Nainar Nagendran
ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் ஆடி 18 விழாவையொட்டி, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் காலை வழிபாடுகளில் கலந்து கொண்டார். காவிரி ஆற்று படித்துறையில் விசேஷ ஹோமம், பால், இளநீர், மஞ்சள், தயிர் போன்றவையுடன் காவிரி தாய்க்கு ஆரத்தி எடுத்தும் வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டினார். தினமும் கொலை சம்பவங்கள் நடைபெறும் நிலையில், கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் காரணமாக கிராமங்கள் வரை பாதிக்கப்படுகின்றன என்றார்.
மின் கட்டணம், சொத்து வரி போன்றவை பல மடங்கு உயர்ந்துள்ளன என்றும், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி வழங்குவதாக தேர்தலுக்கு முன் திமுக வாக்குறுதி அளித்தும் தற்போது மட்டும் சிலருக்கு கொடுப்பதாக விமர்சித்தார்.
அரசு நலத்திட்ட மேடைகளில் திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மோதுவது, அந்தக் கட்சியின் உள்கட்டமைப்புச் சீர்குலைவைக் காட்டுகிறது எனவும், கூட்டணிக்குள்ளும் ஒற்றுமை இல்லையெனவும் தெரிவித்தார்.
அதிமுகவிடம் அதிக தொகுதி கேட்கலாமா என்ற கேள்விக்கு பதிலளித்த நாகேந்திரன், “எங்களின் இலக்கு திமுக ஆட்சியை மாற்றுவதே. அதில் யாருக்கு எத்தனை இடம் என்பது முக்கியமல்ல” என்றார்.
English Summary
ADMK BJP Alliance Nainar Nagendran