உ.பி-யில் கோர விபத்து: சரயு கால்வாய்க்குள் தலைக்குப்புறக் கவிழ்ந்த வாகனம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தினர் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உ.பி-யில் கோண்டா மாவட்டத்தில் உள்ள சிகாக்கான் கிராமத்தைச் சேர்ந்த  கர்குபூர் பகுதியில் அமைந்துள்ள பிருத்விநாத் கோயிலில் வழிபாடு செய்வதற்காகப் பயணிகள் வாகனம் ஒன்றில் இவர்கள் சென்று கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, சீகான் – கர்குபூர் சாலையில் உள்ள பெல்வா பஹுதா என்ற இடத்தின் அருகே வாகனம் சென்ற போது, ஓட்டுநரான பிரகலாத் குப்தாவின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது வாகனம் நிலைகுலைந்து சாலையோரத்தில் இருந்த சரயு கால்வாய்க்குள் தலைக்குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த கோர விபத்தில் 06 பெண்கள், 02 ஆண்கள், 03 குழந்தைகள் என மொத்தம் 11 பேர் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான இடத்தில உள்ளூர் கிராம மக்களும், காவல் துறையினரும் இணைந்து துரித மீட்புப் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது, ஓட்டுநர் உட்பட 04 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சோக விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

11 members of the same family killed in vehicle accident that overturned into Sarayu canal


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->