போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள்: ஒரே நாளில் 08 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ள சவுதி அரேபியா..!
Saudi Arabia Executes 8 People in a Single Day
கடந்த 2022-ஆம் ஆண்டு இறுதியில் இருந்து சவுதி அரேபியா போதைப்பொருள் குற்றங்களுக்கு மரணதண்டனையை மீண்டும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 08 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து சவுதி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கஞ்சா கடத்திய குற்றத்திற்காக, நாட்டின் தெற்கு பகுதியான நஜ்ரானில் 04 சோமாலியர்கள் மற்றும் 03 எத்தியோப்பியர்கள் நேற்று தூக்கிலிடப்பட்ட்டுள்ளனர். அத்துடன், ஒரு சவுதி குடிமகனுக்கு, தனது தாயைக் கொலை செய்த குற்றத்திற்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சவுதி அரேபியாவில் 230 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் 154 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டனர். தொடர்ந்து, 2022-இல் 19 பேருக்கும், 2023-இல் 02 பேருக்கும், 2024-இல் 117 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டுள்ளனர். கடந்த 2024-ஆம் ஆண்டு 338 மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.
2022-ஆம் ஆண்டு இறுதியில் இருந்து சவுதி அரேபியா போதைப்பொருள் குற்றங்களுக்கு மரணதண்டனையை மீண்டும் அமல்படுத்தியது. இதற்கு முன் மூன்று ஆண்டுகளுக்கு இத்தகைய குற்றங்களுக்கு மரணதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Saudi Arabia Executes 8 People in a Single Day