எங்களுடைய பிரச்சாரம் வேற மாதிரி இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த் அதிரடி.!
premalatha vijayakant speech about election campaign
சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- இன்று முதல் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பிரசாரமும், விஜயகாந்தின் ரத யாத்திரையும் தொடங்குகிறது.
இந்தப் பயணம் சென்னை கும்மிடிப்பூண்டியில் தொடங்கி கன்னியாகுமரி வரை மொத்தம் மூன்று கட்டப் பயணமாக இருக்கும். இந்த முறை என்னுடைய பிரசாரம் வேற மாதிரி வித்தியாசமாக இருக்கப் போகிறது. நாங்கள் எங்கு கூட்டணி அமைக்கிறோமோ, அந்தக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். எங்கள் பிரசாரம் அதை நோக்கியே இருக்கும்.

இந்த முறை யாருடனும் இன்னும் கூட்டணி உறுதியாகவில்லை. 'என்ன பேசுவார்கள், யாரைத் திட்டுவார்கள், யாரைக் குறை சொல்வார்கள்' என்று நீங்கள் நினைக்கலாம். திட்டுவதும் குறை சொல்வதும் மட்டுமே அரசியல் இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை வரும் ஜனவரி மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில்தான் அறிவிப்போம்.
English Summary
premalatha vijayakant speech about election campaign