திருவண்ணாமலை : எமனாக வந்த கொக்கு - நர்சிங் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.!!
nursing college student died for ate crane curry in thiruvannamalai
எமனாக வந்த கொக்கு - நர்சிங் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே பொன்னாங்குளம் கிராம பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜவேல்-ஜெயலட்சுமி தம்பதியினர். அவர்களுக்கு அஸ்வினி என்ற மகள் உள்ளார். இவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.
இந்நிலையில், ராஜவேல் கடந்த பதினான்காம் தேதி வயலுக்கு சென்ற போது, வயல் சேற்றில் கிடந்த கொக்கு ஒன்றை எடுத்து வந்து, அதை தனது மகளுக்கு சமைத்து கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட அஸ்வினிக்கு திடீரென விக்கல் ஏற்பட்டுள்ளது.

நீண்ட நேரமாகியும் இந்த விக்கல் நிற்காததால் அவரது பெற்றோர்கள் உடனே அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அஸ்வினி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது தாய் ஜெயலட்சுமி போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் படி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொக்கு கறி சாப்பிட்டு இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
nursing college student died for ate crane curry in thiruvannamalai