NR காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு!
NR Congress Youth Wing announces the opening of the water and buttermilk tent
அகில இந்திய என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நெல்லிதோப்பு தொகுதி இளைஞர் அணி சார்பில் நடந்த நீர், மோர் பந்தலை கதிற்காமம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநில இளைஞர் அணி தலைவர் திரு. கே.எஸ்.பி ரமேஷ் MLA, திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர் மற்றும் தர்பூசணி உள்ளிட்ட பழ வகைகளை வழங்கி சிறப்பித்தனர்.
புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில் நெல்லிதோப்பு தொகுதி இளைஞர் அணி சார்பில் பெரியார்நகர் பகுதியில் நீர்-மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நெல்லிதோப்பு பொறுப்பாளர் திரு. சிவகாந்தன் Er. தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக மாநில இளைஞரணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.பி ரமேஷ், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீர்-மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்,மோர் மற்றும் தர்பூசணி உள்ளிட்ட பழ வகைகளை வழங்கி சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லிதோப்பு இளைஞர் அணி தலைவர் திரு. கார்த்திகேயன், துணை தலைவர் திரு. வீரபாண்டியன், விமல் ராஜ், பொதுச்செயலாளர் கார்த்திகேயன், செயலாளர் திரு. கோகுல கிருஷ்ணன் உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
English Summary
NR Congress Youth Wing announces the opening of the water and buttermilk tent