அத்வானிக்கு வெடிகுண்டு வைத்த வழக்கு.. 12 ஆண்டுகளுக்குப் பின் தேடப்படும் குற்றவாளிக்கு நோட்டீஸ்..!!
Notice strike wanted accused after 12years advani yatra bomb case
கடந்த 2011 ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் அத்வானி தமிழகத்தில் ரத யாத்திரை மேற்கொண்டார். பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்ற ரத யாத்திரையானது மதுரை மாவட்டம் திருமங்கலம் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்வதாக இருந்தது.
அந்த நேரத்தில் அத்வானியை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் ஆலம்பட்டி தரை பாலத்தில் பைப் வெடிகுண்டுகளை வைத்திருந்தனர். அதனை போலீசார் கண்டுபிடித்து செயலை செய்ததால் அத்வானி உயிர் தப்பினார்.

இந்த வழக்கில் மதுரை சேர்ந்த இஸ்மத், அப்துல்லாஹ் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறையைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அபுபக்கர் சித்திக் மட்டும் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள அபுபக்கர் சித்திக்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் அபுபக்கர் சித்திக் உடனடியாக கைது செய்து ஆஜர் படுத்த வேண்டும் என்று பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று சென்னை மற்றும் மதுரை சிறப்பு குற்ற புலனாய்வுத்துறை போலீசார் தோப்புத்துறையில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்ற அபுபக்கர் சித்திக் தேடப்படும் குற்றவாளி என்று அவருடைய புகைப்படத்துடன் கூடிய நோட்டீசை ஒட்டியுள்ளனர்.
English Summary
Notice strike wanted accused after 12years advani yatra bomb case