வடமாநில தொழிலாளிகள் கொடூர முறையில் கொலை! 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம்: பரமத்தி வேலூர் தாலுகா கரப்பாளையத்தை சேர்ந்தவர் விவேகானந்தர். இவரது மனைவி நித்யா (வயது 28 ). கடந்த மார்ச் மாதம் நித்யா ஆடு மேய்க்க சென்ற போது மர்ம நபர்கள் அவரை கற்பழித்து கொலை செய்துவிட்டனர். 

இந்நிலையில் கடந்த மே 13-ந் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் ஜேடர்பாளையம், அருகே முத்துச்சாமி என்பவரின் கரும்பாலையில் பணிபுரிந்த வட மாநில தொழிலாளர்கள் 4 பேர், சிமெண்ட் அட்டையால் தடுக்கப்பட்ட அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிமெண்ட் அட்டையை உடைத்து உள்ளே நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் ராஜேஷ் (வயது 19), சுகிராம் (வயது 29), எஸ்வந்த்(வயது 18), கோகுல் (வயது 28) ஆகிய 4 பேரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

இதில் படுகாயம் அடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு கரூர் மாவட்டம், காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஒடிசாவை சேர்ந்த ராஜேஷ் என்கிற வாலிபர் கடந்த மே 17-ந் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி ஜேடர் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

விசாரணை செய்ததில் கொலைக்கு சம்பந்தமாக 10-க்கும் மேற்பட்டவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடம் மேலும் விசாரணை நடத்திய போது, அதில் முக்கிய நபரான கருக்கம்பாளையத்தை சேர்ந்த தீபக், ராகுல் மற்றும் பாகம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் ஆகிய 3 பேரும் வட மாநிலத்த தொழிலாளிகள் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ததாக தெரிய வந்தது. 

இது குறித்து இன்று, கொலை வழக்கில் கைதான 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டார். 

பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீபக், ராகுல், சக்திவேல் ஆகிய 3 பேருக்கும் குண்டர் சட்டத்தில் கைதான நகல் போலீசாரல் வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Northern workers killed 3 peoples arrested


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->