யார் இந்த கருக்கா வினோத்? விசாரணையில் இறங்கியது என்.ஐ.ஏ!! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது நேற்று பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்பவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தேசிய திறனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ கருக்கா வினோத்தின் பின்புலத்தை விசாரிக்க தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கருக்கா வினோத் கடந்த 21ஆம் தேதி தடை செய்யப்பட்ட அமைப்பினருடன் புழல் சிறையில் இருந்து வெளியே வந்ததால் அது தொடர்பான ஆதாரங்களை தேசிய புலனாய்வு அமைப்பு திரட்ட தொடங்கியுள்ளது.

பலமுறை சிறைக்கு சென்றுள்ள கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தது யார்? கறுக்கா வினோத்திற்கு நிதி உதவி செய்பவர்கள் யார்? என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIA investigates petrol bomb attack on Governor House


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->