அடுத்த கட்ட நகர்வு.. கரூரில் தடயவியல் குழுவினர் ஆய்வு! - Seithipunal
Seithipunal


 கரூரில் விஜய் பிரசாரம் செய்த போது நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தடயவியல் குழுவினர் ஆய்வு செய்தனர்.

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது  விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 100-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்து உள்ளனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கரூரில் விஜய் பிரசாரம் செய்த வேலுச்சாமிபுரத்தில் கரூர் மாவட்ட தடயவியல் குழுவினர் ஆய்வு செய்தனர். நெரிசல் ஏற்பட்ட இடம், வாகனங்கள் வந்த இடங்களில் 3 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது சம்பவ இடத்தில் இருந்த அனைத்தையும் வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவு செய்து கொண்டனர். மேலும் பிரசாரத்திற்கு வந்தவர்கள் தவறவிட்ட பொருட்கள், சந்தேகப்படும்படியான அனைத்து பொருட்களையும் தடவியல் குழுவினர் சேகரித்து எடுத்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Next phase of movement Forensic team examines in Karur


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->