நகைக் கடன் பெற புதிய நிபந்தனைகள்..மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்! - Seithipunal
Seithipunal


வங்கிகள்தான் ஏழை, எளிய கிராமப்புற மக்கள் வாங்கும் சிறு அளவிலான நகைக் கடன்களை கட்டுப்படுத்துவதற்கும், நிராகரிப்பதற்குமான செயல்களில் இறங்கியுள்ளன. இது முற்றிலும் நியாயமற்ற அணுகுமுறையாகும்.என்று பெ.சண்முகம் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக் கடன் வழங்குவதற்கான புதிய நிபந்தனைகள் இனி பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்களில் ஏழை, எளிய நடுத்தர மக்கள் நகைக் கடன் பெறவே முடியாது என்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த மோசமான நடவடிக்கையினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

ரிசர்வ் வங்கியின் புதிய நிபந்தனைகளில், ஏற்கனவே தங்க நகையின் மொத்த மதிப்பில் 80 சதவீதம் கடன் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது ஏழை, எளிய மக்களை வஞ்சிப்பதாகும்.  மேலும், அடமானம் வைத்த நகையை முழுமையாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய நிபந்தனை நகையை மறு அடமானம் வைப்போர் கந்துவட்டிக்காரர்களிடம் தஞ்சம் புகுவதற்கான ஏற்பாட்டை செய்து கொடுக்கிறது. 

கடன் வாங்கி விட்டு அவற்றை திரும்ப செலுத்தாத பெருமுதலாளிகளின் பெயர்களை வெளியிட மறுப்பது என்று பல்வேறு வகைகளில் பெருமுதலாளிகளுக்குச் சாதகமாக பொதுச் சொத்துகளை வாரிக்கொடுக்கும் வங்கிகள்தான் ஏழை, எளிய கிராமப்புற மக்கள் வாங்கும் சிறு அளவிலான நகைக் கடன்களை கட்டுப்படுத்துவதற்கும், நிராகரிப்பதற்குமான செயல்களில் இறங்கியுள்ளன. இது முற்றிலும் நியாயமற்ற அணுகுமுறையாகும்.

எனவே, ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய நிபந்தனைகளை உடனடியாக கைவிட வேண்டுமெனவும், மத்திய நிதித்துறை ரிசர்வ் வங்கிக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New conditions for getting a gold loan Marxist Communist Party condemnation


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->