கிருஷ்ணகிரி || கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயி.!
near krishnagiri farmer died for debt
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொடுகனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் ஒரு விவசாயி. இவருக்கு சில காலமாக கடன் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், அவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று அந்த கடனை அடைப்பதற்கு, முடிவு செய்துள்ளார்.
ஆனால், இந்த முடிவை அவரது குடும்பத்தினர் ஏற்கவில்லை. அத்துடன் அவரது குடும்பத்திற்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், சின்னசாமியின் மனைவி தனது தாய்வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால், மனம் நொந்து போன சின்னசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சின்னசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று, தளி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான நாராயணசாமி என்பவர் குடிப்பதற்கு மனைவி பணம் தராததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
near krishnagiri farmer died for debt