கடலூர் : நாய்குட்டிகளை பொதுமக்களிடம் இருந்து பாதுகாத்த நல்ல பாம்பு.!
near cuddalore snake protected puppies
கடலூர் மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவர் அதே பகுதியில் சொந்தமாக புதிய வீடு ஒன்று கட்டி வருகிறார். அதற்காக பள்ளம் தோண்டிய பள்ளத்தில் திடீரென்று நாய் ஒன்று மூன்று குட்டிகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்றுள்ளது.
அப்போது அங்கு வந்த நல்ல பாம்பு பொதுமக்கள் யாரையும் நாய் குட்டிகளிடம் நெருங்க விடாமல் கம்பீரமாக நின்று பாதுகாத்து வந்தது. அப்போது அங்கு வந்த தாய் நாய் தனது குட்டிகளின் பக்கத்தில் பாம்பு இருப்பதை பார்த்த்து.

அந்த பாம்பிடம் இருந்து தனது குட்டிகளை பாதுகாக்க வேண்டும் என்று வேகமாக சென்றது. ஆனால் அந்த நல்ல பாம்பு அந்த தாய் நாயையும் குட்டிகளின் அருகில் விடவில்லை. இதனால் தாய் நாய் பாம்பை பார்த்த படி வெகு நேரமாக குரைத்துக் கொண்டிருந்தது.
ஒரே இடத்தைப் பார்த்து நீண்ட நேரமாக நாய் குரைத்துகொண்டு இருந்ததால் அருகில் இருந்த பொதுமக்கள் சந்தகமடைந்து அந்த இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது நல்ல பாம்பு ஒன்று தலை தூக்கியபடி, நாய் குட்டிகளை பாதுகாத்துக்கொண்டு இருப்பதை பிரமிப்புடனும், ஆச்சரியத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் வனத்துறைக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் அளித்தனர்.
இந்த தகவலின் படி, கடலூர் வன அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நல்ல பாம்பை பிடித்து கொண்டு பாதுகாப்பாக காட்டில் விட்டனர். ஒரு நல்ல பாம்பு நாய்க்குட்டியை பாதுகாத்து அந்த பகுதியில் ஒரு பேசு பொருளாகி உள்ளது.
English Summary
near cuddalore snake protected puppies