கடலூர் || கோமுகி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலம்.! சடலத்தை தண்ணீரில் தூக்கிச் சென்ற அவலம்..! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் வேப்பூர் அருகே உள்ள நகர் கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் கோமுகி ஆற்றின் குறுக்கே சிறுபாலம் ஒன்று அமைக்கபட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த பாலம் வடக்கு பகுதியில் அடித்து சென்றதில்  பாதிபாலம் இடிந்து விழுந்தது.

இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்கள் பாலம் அமைத்துத்தர வேண்டி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நல்லூர் ஒன்றிய நிர்வாகம் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து, அப்பகுதியில் நகர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். நேற்று இவரது உடலை அடக்கம் செய்ய நகர் மயானத்திற்கு பாடை கட்டி தூக்கி சென்றனர்.

அப்போது கோமுகி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் திடீரென இடிந்து விழுந்ததால், இடுப்பளவு தண்ணீரில் ஆற்றை கடந்து மயானத்திற்கு சென்றனர். 

ஆற்றில் அளவுக்கு மீறி தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் வயதானவர்களும் குறைந்த வயது உள்ளவர்களும் ஆற்றை கடந்து செல்ல முடியாமலும்  அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாமலும் கரையிலேயே நின்றுவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் நகர் கிராமத்திலுள்ள கோமுகி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டிதர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near cuddalore bridge broke for floods


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->