காது வலிக்குச் சிகிச்சை பெற்ற பள்ளி மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம்.!
near chennai plus one student died for wrong medical treatment
சென்னை திருவொற்றியூர் ராஜா கடை பகுதியை சேர்ந்தவர் நந்தினி மகள் அபிநயா. சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் இவருக்கு அடிக்கடி காது வலி ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்காக, தயார் நந்தினி அபிநயாவை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள தனியார் காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட சோதனைகள் நடைபெற்றது.

இதையடுத்து, அபிநயாவிற்கு கடந்த 14-ந் தேதி காதில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து சில மணி நேரத்தில் அபிநயா தனக்கு நெஞ்சு அதிகமாக வலிப்பதாக தெரிவித்துள்ளார். உடனடியாக மருத்துவர்கள் அபிநயாவிற்கு 'எக்கோ' பார்த்த போது, மூச்சுத் திணறல் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அபிநயா நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தயார் மாணவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், கவனக்குறைவாக செயல்பட்ட தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு சாலையின் இருபுறமும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு, தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சத்தமிட்டனர்.

இதையடுத்து அந்தப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டது. அவர்களிடம் மறியலில் ஈடுபட்டவர்கள், மாணவிக்கு தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளை நேரில் வரவழைக்க வேண்டும் என்று தெரிவித்து போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார், மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை வந்த பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன் பின்னர், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
English Summary
near chennai plus one student died for wrong medical treatment