கடவுள் ராமர் குறித்து ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு! பாய்கிறதா வழக்கு?!
Congress Rahul Gandhi Hindu God Ramar
கடவுள் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஹரிசங்கர் பாண்டே தாக்கல் செய்த மனு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மனுவில், கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி அமெரிக்காவின் போஸ்டனில் நடந்த நிகழ்வில் ராகுல் காந்தி உரையாற்றும்போது, “ராமரின் காலத்திலிருந்து தோன்றிய கதைகள் எல்லாம் புராண கற்பனைகள்” என்ற கருத்தை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது சனாதனவாத மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், வெறுப்புப் பேச்சாக இருப்பதாகவும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நீரஜ் குமார் திரிபாதி, வழக்கை மே 19ஆம் தேதி விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், ராகுல் காந்தி மற்றும் உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய்க்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.
English Summary
Congress Rahul Gandhi Hindu God Ramar