காதலியின் கணவரை கொலை செய்த காதலன்..கடைசியில் நடந்த அதிர்ச்சி!
The lover who killed his girlfriends husband the shocking event that happened in the end
காதலியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரம் அடைந்த காதலன் அவரது கணவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், ஆதிவபுடியை சேர்ந்த இளம் பெண் ஸ்ரவாணி சந்தியாவும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் பவன் என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இதனிடையே காதலி சிறுவாணி சந்தியா வீட்டிற்கு காதலன் பவன் பெற்றோர்களுடன் சென்று பெண் கேர்க்க அவர்களது பெற்றோர் பெண் தர மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து சிறுவாணி சந்தியாவை ராஜமுந்திரி மாவட்டம், மூலகடாவை சேர்ந்த கார் டிரைவரான வெங்கட்ரமணா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.இதனால் காதலியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்ததால் அவரது கணவரை கொலை செய்ய பவன் திட்டமிட்டு வந்தார்.இதற்காக ஐதராபாத் கே.பி.எச்.பி. காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த வெங்கட்ராமணாவை,பவன் தனது 4 நண்பர்களுடன் வந்து சரமாரியாக கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள பவனை தேடி வருகின்றனர். திருமணத்திற்கு பிறகும்முன்னாள் காதலனுடன் ஸ்ரவாணி சந்தியா தொடர்பில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
English Summary
The lover who killed his girlfriends husband the shocking event that happened in the end