மெரினா கடற்கரையில் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் திடீர் தீ விபத்து - அதிர்ச்சியில் பொதுமக்கள்.!!
fire to anna and kalaingar memorable place in merina
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகள் அமைந்துள்ளது. உலகப்புகழ் பெற்ற நீண்ட கடற்கரையை கொண்ட சுற்றுலா தலமான இங்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், சென்னை மக்களும் வந்து செல்வார்கள்.
விடுமுறை நாட்களில் ஏராளமானோர் குடும்பமாக வந்து சென்று மகிழ்ச்சியாக இருந்துவிட்டு செல்வார்கள். அவ்வப்போது இங்கு மது குடித்துவிட்டு தகராறு செய்யும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், மெரினா கடற்கரையில் அண்ணா மற்றும் கருணாநிதி சமாதி அருகே இளைஞர் ஒருவர் மது போதையில் சுற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென அவர், தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் உள்ள திரியில் தீயை பற்ற வைத்து அதனை அண்ணா மற்றும் கருணாநிதி சமாதி அருகே வீசிவிட்டு தப்பியோடிவிட்டார்.
இதைப்பார்த்த பொதுமக்கள் கத்திக் கூச்சலிட்டனர். ஆனால், அந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெய் பெரியளவில் எரியாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
தொடர்ந்து, அவரை அண்ணா சதுக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர், தூத்துக்குடியை சேர்ந்த முத்துச்செல்வன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
fire to anna and kalaingar memorable place in merina