சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு! - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறால் தடை...!
Air India Express flight grounded due to technical glitch at Chennai airport
சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது. காலை 10.45 மணிக்கு புறப்படவிருந்த அந்த விமானத்தில் 104 பயணிகளும், 5 விமான ஊழியர்களும் உட்பட மொத்தம் 109 பேர் இருந்தனர்.
மேலும், புறப்பாட்டிற்கான இறுதி கட்டத்தில், ஓடுபாதையில் வேகமாக செல்லத் தொடங்கியபோது, விமானத்தின் எந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி உடனடியாக கவனித்தார்.

அங்கு அதிரடியாக நடவடிக்கை எடுத்த அவர், விமானத்தை பாதுகாப்பாக புறப்பட்ட இடத்திற்கே திருப்பி நிறுத்தினார்.மேலும்,விமான பராமரிப்பு குழு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டு, எந்திர கோளாறை சரிசெய்தது. அதன் பின்னர், விமானம் மதியம் 12 மணிக்கு தாமதமாக புறப்பட்டு பெங்களூருவை நோக்கி பறந்தது.
இந்த திடீர் சம்பவம் காரணமாக, பயணிகள் அச்சத்துடன் சில மணி நேரம் காத்திருந்து அவதி அடைந்தனர். அதேசமயம், விமான நிலைய அதிகாரிகள், “பயணிகள் பாதுகாப்பே எங்களின் முதல் முன்னுரிமை” எனத் தெரிவித்தனர்.
English Summary
Air India Express flight grounded due to technical glitch at Chennai airport