முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.பக்ருதின் அலி அகமது அவர்கள் பிறந்ததினம்!. - Seithipunal
Seithipunal


முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.பக்ருதின் அலி அகமது அவர்கள் பிறந்ததினம்!.

 இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவரான பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி டெல்லியில் பிறந்தார்.

 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். இரண்டு முறை அசாம் சட்டமன்றத்திற்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நடுவண் அமைச்சரவையில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த இவர் குறிப்பாக உணவு மற்றும் வேளாண்மைத் துறை, கூட்டுறவு, தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை மற்றும் நிறுவன சட்டங்கள் போன்ற துறைகளுக்கான அமைச்சராக பணியாற்றினார். 1967-ல் அகில இந்திய மட்டைப்பந்து சங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1974-ல் இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி ஏற்று, இறக்கும் வரை பதவியில் இருந்த பக்ருதின் அலி அகமது தனது 71வது வயதில் 1977 பிப்ரவரி 11 ஆம் தேதி அன்று மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former President Mr Bakruthin Ali Ahmad was born on this day


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->